ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு
Prasu
2 years ago
டிபென்டர் வாகனம் ஒன்றில் இளைஞர் ஒருவரைக் கடத்திச் சென்று தடுத்து வைத்து சித்திரவதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை 2023 ஜனவரி 30ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்த வழக்கு இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது பிரதிவாதி ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் ஆஜரான சட்டத்தரணி அஷான் பெர்னாண்டோ, இந்த வழக்கு தொடர்பான இரண்டு காணொளி ஆதாரங்களை முன்வைக்க தயாராக இருப்பதாகவும், வீடியோ ஆதாரங்களின் உள்ளடக்கத்தை ஆய்வு செய்ய கால அவகாசம் தேவை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.