தமிழ் மக்களை இந்த நாட்டின் எதிரிகளாக காட்டும் நிலைமையே இருந்துவருகிறது - இரா.சாணக்கியன்

Kanimoli
2 years ago
தமிழ் மக்களை இந்த நாட்டின் எதிரிகளாக காட்டும் நிலைமையே இருந்துவருகிறது - இரா.சாணக்கியன்

தங்களுக்கு அதிகாரம் இல்லாமல்போகும் சந்தர்ப்பத்தில் எல்லாம் தமிழ் மக்களை இந்த நாட்டின் எதிரிகளாக காட்டும் நிலைமையே இருந்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில்  மேலும் தெரிவிக்கையில், 

“கொழும்பில் கூட விலைவாசி அதிகரிப்புக்கு எதிராக போராடும் பெண்களைக்கூட பொலிஸார் கட்டுப்படுத்தும்போது வடக்கு கிழக்கில் தமது கோரிக்கையினை வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுக்கும்போது இன்னும் தமிழ் மக்களை அடக்கும் நிலைமைகள் பாரியளவில் முன்னெடுக்கும் சூழ்நிலையே உள்ளதாகவும் தமிழ் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்” எனவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 

“தமிழ் மக்களுக்கு யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் எந்தவிதமான கருத்துகளும் இல்லை. ஆனால் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வுபெற்று பொருளாதார ரீதியாக சிறந்த வாழக்கூடிய சூழ்நிலையினையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம். 

இந்த நாட்டினை கட்டியெழுப்பமுடியாவிட்டால் அரசாங்கம் பதவி விலகிவிட்டு தேர்தலொன்றுக்கு செல்ல வேண்டும்” என இதன்போது தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!