கடன் வழங்கும் நாடுகள் வசதிகளை பெற்றுக்கொடுப்பதில் தலையிட்டு ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்!

Mayoorikka
2 years ago
 கடன் வழங்கும் நாடுகள் வசதிகளை பெற்றுக்கொடுப்பதில் தலையிட்டு ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்!

அரச மற்றும் தனியார் கடன் வழங்குநர்கள் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்கு கடன் வசதிகளை பெற்றுக்கொடுப்பதில் தலையிட்டு, ஒத்துழைப்புகளை வழங்க வேண்டுமென உலகின் பொருளாதார சக்தி வாய்ந்த நாடுகளின் ஒன்றியமான G20 அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்தோனேசியாவில் G20 உச்சிமாநாட்டின் பின்னர் வெளியிடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள கூட்டறிக்கையை மேற்கோள் காட்டி, ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை இதனை தெரிவித்துள்ளது.

குறைந்த வருமானம் பெறும் நாடுகளின் நிலையை விட மிக மோசமான நிலையில் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நெருக்கடி நிலை காணப்படுவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடுத்தர வருமானம் பெரும் நாடுகளின் கடன் நெருக்கடி குறித்து, இந்தோனேசியாவின் பாலி நகரில் இடம்பெறும் G-20 மாநாட்டில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்பிற்கான எதிர்வுகூறப்படக்கூடிய காலம், இணைப்பு செயற்பாடுகள் உள்ளிட்ட வரைபை தயாரித்துக் கொள்வதற்கு G-20 நாடுகளின் தலைவர்கள் முயற்சிப்பதாக, உத்தேச கூட்டறிக்கையை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.


குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு COVID-19 நெருக்கடியைச் சமாளிக்க உதவும் வகையில் 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் G20 மற்றும் கடன் வழங்குநர்களின் பாரிஸ் அமைப்பினரால் இந்த பொதுவான கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

எனினும், எதிர்பார்த்த முடிவுகளை இந்த கட்டமைப்பினால் ஏற்படுத்த முடியவில்லை என ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது.

ஸாம்பியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகள் மட்டுமே இந்தக் கட்டமைப்பின் கீழ் கடன் மறுசீரமைப்பிற்கு  விண்ணப்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


G-20 தலைவர்களின் நாடுகளில் உள்ள கடன் வழங்குநர்களால் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் வரவேற்கப்பட்டுள்ளதுடன், 2023ஆம் ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் ஸாம்பியாவிற்கான கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி திட்டத்திற்கு கீழ் எத்தியோப்பியாவிற்கான கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்வதற்கான நடவடிக்கையை G-20 அமைப்பு உறுதி செய்யவுள்ளது.

நடுத்தர வருமானம் பெறும் நாடுகளை சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் தலைவர்கள், அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய மேற்குலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டுவர G-20 அமைப்பு அதிக முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாத ஆரம்பத்தில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய கடன் வசதியை விடுவிக்க சீனா மற்றும் ஜப்பான் உட்பட பல கடன் வழங்குநர்களிடமிருந்து நிதி உத்தரவாதத்தைப் பெறுவது அவசியம் என G20 நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!