கொழும்பில் 11 வயது மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியருக்கு பிணை

Prathees
2 years ago
கொழும்பில் 11 வயது மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியருக்கு பிணை


 

கொழும்பில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் 06 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 11 வயது மாணவனை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட ஆசிரியரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர் பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ஷிலானி பெரேரா முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.

சந்தேகத்திற்குரிய ஆசிரியரின் மனிதாபிமானமற்ற தாக்குதலினால் தமது பிள்ளை வாந்தி எடுக்க ஆரம்பித்ததாகவும் அதன் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருவதாகவும் குழந்தையின் பெற்றோர் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

அந்தத் தாக்குதல்களால் குழந்தைக்கு உள் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சிறுவர் உரிமைகளுக்காக வாதிட்ட சட்டத்தரணி குமார வெல்கம தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதவான், குறித்த சந்தேகநபரான ஆசிரியரை தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!