வசந்த முதலிகேவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு பொலிஸாருக்கு அனுமதி
Prathees
2 years ago
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலி மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரிடம் வாக்குமூலம் பெறுவதற்கு பொலிஸாருக்கு இன்று கோட்டை நீதவான் திலின கமகே அனுமதி வழங்கியுள்ளார்.
நீதிமன்றத்திடம் பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னரே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 19ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்ட இரு சந்தேக நபர்களின் பெயர்களை பெயரிடுமாறும் அவர்களின் வாக்குமூலங்களைப் பெறுமாறும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
இதன்படி தங்காலை பழைய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தவர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கு பொலிஸார் நீதிமன்றில் அனுமதி பெற்றுள்ளனர்.