வவுனியா - பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 5 கைதிகள் தப்பியோட்டம்

Prasu
2 years ago
வவுனியா - பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 5 கைதிகள் தப்பியோட்டம்

வவுனியா - பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 5 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு நீதிமன்ற உத்தரவுகளின்படி, இந்த நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு, புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுவந்தவர்களே தப்பியோடியுள்ளனர் என்றும் நேற்று மாலை விளையாட்டுப் பயிற்சி நடவடிக்கைகளின்போது அவர்கள் தப்பியோடியுள்ளனர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தப்பியோடிய 5 பேரும் வட மாகாணத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களை தேடும் நடவடிக்கையை நேற்று (15) முதல் காவல்துறையினரும், இராணுவத்தினரும் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!