அடுத்த சில நாட்களில் நாட்டில் பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் : லக்ஷ்மன் வீரசூரிய

#Milk Powder
Keerthi
1 year ago
அடுத்த சில நாட்களில் நாட்டில் பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் : லக்ஷ்மன் வீரசூரிய

அடுத்த சில நாட்களில் நாட்டில் பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என நாட்டின் பிரதான பால் மா இறக்குமதி நிறுவனமொன்றின் தலைவரான லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் 25 நாட்களாக 15 பால் மா கொள்கலன்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் இறக்குமதி கட்டுப்பாட்டு நாயகம் தீர்மானம் எடுப்பதில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிலைமைகள் காரணமாக நுகர்வோர் பால் மாவுக்கான விலைகள் அதிகரிக்குமென அவர் மேலும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,“வெளிநாட்டில் இருந்து எங்களுக்கு பால் மா விநியோகம் செய்த முகவரகங்கள், அவற்றை வியட்நாம் மற்றும் இந்தோனேஷியாவுக்கு மீண்டும் அனுப்பச் சொல்கிறார்கள். அப்போது என்ன நடக்கும், நாட்டில் பால்மா பற்றாக்குறை ஏற்படும். ரூபா 40 லட்சத்துக்கு மேல் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஒரு கப்பல் பால் மா கொண்டு வர 37 முதல் 42 நாட்கள் வரை ஆகும். இந்த அத்தியாவசிய பொருட்கள் நாட்டுக்கு வரும்போது மூன்று அல்லது நான்கு சுற்றறிக்கைகள் வரும்.

கப்பலில் பொருட்களைப் போடுவதற்கு முன் ஒரு விதி, கப்பலில் இருந்து பொருட்கள் வரும்போது மற்றொரு விதி, கப்பல் இலங்கைக்கு வந்து துறைமுகத்துக்கு வரும்போது மற்றொரு விதி” என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!