2024-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்த டிரம்ப்
அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப், தற்போதைய ஜோ பைடன் அரசு நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இதற்கிடையே 2024-ம் ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே நவம்பர் 15-ந்தேதி (நேற்று) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதாக டிரம்ப் அறிவித்து இருந்தார்.
அதன்படி அவர் இன்று அந்த அறிவிப்பை வெளியிட்டார். 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.
இதையடுத்து அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க மத்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து உள்ளார்.
டிரம்ப் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்கிறேன்.
அமெரிக்காவின் மறுபிரவேசம் இப்போதே தொடங்குகிறது என்றார். டிரம்ப் அதிபர் தேர்தலில் 3-வது முறையாக போட்டியிட உள்ளார். கடந்த தேர்தலில் போட்டியிட்ட அவர் ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார்.
ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி தனது தோல்வியை ஏற்க டிரம்ப் மறுத்தார். அவரது ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.