ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் பிள்ளைகளுக்கு கொலை மிரட்டல் வருவதாக குற்றச்சாட்டு

Prasu
2 years ago
ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் பிள்ளைகளுக்கு கொலை மிரட்டல் வருவதாக குற்றச்சாட்டு

ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் தனக்கும், தன் பிள்ளைகளுக்கும் கொலை மிரட்டல்கள் வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சரான Karl Lauterbach, தனக்கும், தன் பிள்ளைகளுக்கும் கொலை மிரட்டல்கள் வருவதாகவும், அதனால், தனியாக வெளியே செல்ல அச்சமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.தனது காரை தான் வீட்டுக்கு வெளியே பார்க் செய்வதில்லை என்று கூறும் Lauterbach, தான் இரவில் வெளியே செல்லும்போது தனக்கென தனியாக பாதுகாவலர்களுடனேயே பயணிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எனக்குள் அச்சம் இருந்துகொண்டே இருக்கிறது என்று கூறும் Lauterbach, எனது பிள்ளைகளுக்கும் கொலை மிரட்டல் வருவதுதான் அதிர்ச்சியாக உள்ளது என்கிறார்.

ஒரு தொற்றுநோயியல் நிபுணரான Lauterbach, அரசின் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாகவே குறிவைக்கப்பட்டுள்ளார்.தான் அரசின் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்தே வெறுப்பை சம்பாதித்து வருவதாக தெரிவிக்கிறார் அவர்.

இந்த ஆண்டின் துவக்கத்தில், Lauterbachஐ கடத்த திட்டமிட்ட, அரசுக்கு எதிராக செயல்படும் கும்பல் ஒன்று பொலிசாரிடம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!