பாகிஸ்தானில் 70 வயது முதியவரை திருமணம் செய்த 19 வயது பெண்

Prasu
3 years ago
பாகிஸ்தானில்  70 வயது முதியவரை திருமணம் செய்த 19 வயது பெண்

பாகிஸ்தானில் உள்ள லாகூர் பகுதியில் ஷிமைலா என்ற 19 வயது பெண் வசித்து வருகிறார். இவர் 70 வயதுடைய லியாகத் என்ற முதியவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். 

இந்நிலையில் லாகூரில் அதிகாலை நடைப்பயிற்சி செய்த  போது ஷிமைலா  முதியவரை  சந்தித்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். 

அதேபோல் ஒரு நாள் லியாகத் அதிகாலை நடைப்பயிற்சியின்  போது ஷிமைலா  பின்னால் பாடல் பாடி கொண்டு சென்றதன் மூலமாக இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. 

இவர்களது காதல் கதை குறித்து யூடியூபர் இவர்களிடம் நேர்காணலில் பேசியுள்ளார்.

அப்போது ஷிமைலா  கூறியதாவது. காதல் என்பது எப்போதும் வயதை பார்ப்பதில்லை. மேலும் என்னுடைய பெற்றோர்கள் இதனை கடுமையாக எதிர்த்தனர். 

ஆனால் நாங்கள் எங்கள் காதலை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி எனது பெற்றோர்களை சம்மதிக்க வைத்தோம். 

இதனையடுத்து லியாகத் பேசியதாவது. எனக்கு 70 வயதாகியும் நான் மனதளவில் இளமையாக தான் இருக்கிறேன். 

மேலும் தற்போது மனைவியின் சமையலில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தற்போது உணவகங்கள் சாப்பிடுவதை நிறுத்தி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4