பேனா, பென்சில் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களின் விலை 300 வீதம் வரை அதிகரிப்பு

Prathees
2 years ago
பேனா, பென்சில் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களின் விலை  300 வீதம் வரை அதிகரிப்பு

தற்போதைய பொருளாதார நெருக்கடியில், பாடசாலை செல்லும் குழந்தைகளும், பெற்றோர்களும் தற்போது மற்றொரு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

பாடசாலை பயணத்திற்கு அத்தியாவசியமான புத்தகங்கள், பேனாக்கள், பென்சில்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களின் விலை வேகமாக அதிகரித்துள்ளமையே அதற்குக் காரணம்.

பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலை புத்தகங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களின் விலை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

இவ்வருட முதற்பாதியில் இருந்த பாடசாலை உபகரணங்களின் விலை சில மாதங்களில் வேகமாக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

முன்னர் 10, 15, 20 ரூபாயாக இருந்த பேனாவின் விலை தற்போது 25, 35, 40 ரூபாயாக அதிகரித்துள்ளது.

20 ரூபாய்க்கு விற்கப்பட்ட பென்சில் தற்போது 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

10 ரூபாய்க்கு விற்கப்பட்ட அழிப்பான் விலை, 25 முதல் 30 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

10 ரூபாயாக இருந்த கத்தரிக்கோல் 30 ரூபாவாகவும், 70 ரூபாவாக இருந்த கத்தரிக்கோலின் விலை 160 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. 100 ரூபாயாக இருந்த ஒரு பாட்டிலின் விலை 265 ரூபாயாக உயர்ந்துள்ளது.

சுமார் 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட கலர் பாக்ஸ் தற்போது 800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

680 ரூபாயாக இருந்த கலர் பென்சில் பெட்டியின் விலை 1300 ரூபாயாக அதிகரித்துள்ளது.

பேனா, பென்சில் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களின் விலை 200 முதல் 300 வீதம் வரை அதிகரித்துள்ளதாக  தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!