காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவர் பலி
Kanimoli
2 years ago
கம்பஹாவில், மினுவாங்கொட பகுதியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மினுவாங்கொட, பொல்வத்தையில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டின் போது, குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலின் தலைவரான உரகஹா இந்திக்கவின் ஆதரவாளர்களே இவ்வாறு காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் விசேட அதிரடிப்படையின் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.