அவுஸ்திரேலியாவில் உள்ள தனுஷ்கவை கவனிக்க முன்வந்துள்ள சிட்னியில் உள்ள பல இலங்கை செல்வந்தர்கள்!

Mayoorikka
2 years ago
அவுஸ்திரேலியாவில் உள்ள தனுஷ்கவை கவனிக்க முன்வந்துள்ள சிட்னியில் உள்ள பல இலங்கை செல்வந்தர்கள்!

சிட்னியில் உள்ள நீதவான் நீதிமன்றத்தால் நேற்று கடுமையான நிபந்தனைகளின் கீழ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, அவுஸ்திரேலிய காவல்துறையினருக்கு உடனடியாக உள்ளூர் முகவரியை வழங்க வேண்டியிருப்பதால், பணக்கார இலங்கை குடிமகன் ஒருவரின் வீட்டில் வசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

150,000 அவுஸ்திரேலிய டொலர்களின் உத்தரவாதம் உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளின் கீழ் அவருக்கு நேற்று பிணை வழங்கப்பட்டது.

இந்தநிலையில், மெல்பேர்னில் வசிக்கும் பெயர் குறிப்பிடப்படாத இலங்கைப் பெண் ஒருவர் கிரிக்கெட் வீரருக்கு பிணை வழங்குவதற்காக முழுப் பணத்தையும் உடனடியாக சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எனினும் கிரிக்கெட் வீரருக்கும் இந்த பெண்ணுக்கும்; உள்ள தொடர்பு அல்லது அவர் வெறுமனே ஒரு ரசிகரா என்ற தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், சிட்னியில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த பல செல்வந்தர்கள் தனுஷ்கவுக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்கும் அவர் தங்கியிருக்கும் காலத்தில் அவரது செலவுகளைக் கவனிப்பதற்கும் முன்வந்துள்ளனர். 

தற்போதைக்கு, அவரைக் கவனிக்க பல தன்னார்வலர்கள் முன்வந்துள்ளமையால், கிரிக்கெட் வீரரின் தங்குமிடத்திற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு எந்த செலவும் இல்லை, 

எனினும் ஸ்ரீலங்கா கிரிக்கட் தனுஷ்கவின் சட்டச் செலவுகளை தொடர்ந்து செலுத்தவுள்ளது.

இந்தநிலையில் அவரது வழக்கு ஜனவரி 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!