பொலிஸாரால் மீட்கப்பட்ட இரு சடலங்களை அடையாளம் காண உதவுமாறு யாழ்.போதனா வைத்தியசாலை கோரிக்கை
Prasu
2 years ago
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் , அடையாளம் காணப்படாத நிலையில் ஆணொருவரதும், பெண்ணொருவரதும் சடலம் காணப்படுவதாகவும், அவற்றை அடையாளம் காண உதவுமாறு கோரப்பட்டுள்ளது.
இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருவடி நிலை கடற்கரையில் கடந்த ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி கரையொதுங்கிய ஆணொருவரின் சடலம் யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
அதேவேளை யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டு , பொலிஸாரினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
குறித்த இரு சடலங்களையும் அடையாளம் காண உதவுமாறு யாழ்.போதனா வைத்திய சாலை தரப்பினர் கோரியுள்ளனர்.