இளம் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது
கிளிநொச்சியில் அண்மையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சியில் வர்த்தக நிலையம் ஒன்றில் முன்னால் வைத்து அண்மையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த (10.10.2022) அன்று உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிஸார் மேற்கொண்ட புலன் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர் ஒருவரை நேற்று கொழும்பில் வைத்து கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.