பிரிட்டனில் இரத்தக்களரியில் முடிந்த திருமண விருந்து -ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு சிறை
பிரிட்டனில் திருமண விருந்தொன்று இரத்தக்களரியில் முடிந்த நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் சுமார் 50 பேர்கள் வரையில் கலந்துகொண்ட திருமண விருந்தானது ஸ்டோக்ஸ் குடும்பத்தினரால் இரத்தக்களரியாக மாறியுள்ளது. வாரிங்டன் பகுதியில் அமைந்துள்ள டேர்ஸ்பரி பார்க் ஹொட்டலில் தொடர்புடைய சம்பவம் நடந்துள்ளது.இதில், நாற்காலிகள், மேஜைகள் மற்றும் குவளைகளை ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்துள்ளனர் மற்றும் சண்டையின் போது கோட் ஸ்டாண்டுகள் மற்றும் தீயை அணைக்கும் கருவிகளை ஆயுதங்களாகப் பயன்படுத்தியுள்ளனர்.
மொத்தம் 16,000 பவுண்டுகள் தொகைக்கான சேதத்தை அந்த ஹொட்டலுக்கு ஸ்டோக்ஸ் குடும்பத்தினர் ஏற்படுத்தியுள்ளனர். சம்பவத்தின் போது, உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில் குறித்த ஹொட்டலில் திருமண விருந்துக்கு வந்திருந்த மூவர் மதுபான கூடத்தில் விவாதத்தில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.ஆனால், சுமார் 15 நிமிடங்களுக்கு பின்னர் முதன்மையான மதுபான கூடத்தில் சுமார் 40 பேர்கள் சண்டையில் இறங்கியுள்ளனர். இவர்களே மேஜை, நாற்காலிகளை ஒருவர் மீது ஒருவர் வீசியுள்ளனர்.
தகவல் அறிந்து உள்ளூர் பொலிசார் சம்பவப்பகுதிக்கு சென்ற நிலையில், அவர்களால் கட்டுப்படுத்த முடியாது என தெரிந்துகொண்டு ஆயுத பொலிஸாரின் உதவியை நாடியுள்ளனர். இதனையடுத்து, 30 வாகனங்களில் வந்த பொலிசார் கூட்டமாக அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இந்த விவகாரம் தொடர்பில் நீதிபதி சைமன் பெர்க்சன் தெரிவிக்கையில், அன்றைய நிகழ்வுகள் பார்ப்பவர்களுக்கு உண்மையிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது என்றார்.இதனிடையே, ஸ்டோக்ஸ் குடும்பத்தினரில் நான்கு பேருக்கு நவம்பர் 14ம் திகதி செஸ்டர் கிரவுன் நீதிமன்றம் தண்டனை அறிவித்துள்ளது. சிலருக்கு 21 மாதங்கள் எனவும் சிலருக்கு 18 மாதங்களும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளனர்.