வெலிகடையில் இருந்து பொரளை வரையான மருங்கையில் போக்குவரத்து முற்றாக தடை
Kanimoli
2 years ago
கொழும்பு பேஸ் லைன் வீதியின் வெலிகடையில் இருந்து பொரளை வரையான மருங்கையில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மற்றுமொரு மாணவர் குழுவினரால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டகர்கள் தற்போது கொழும்பு பேஸ் லைன் வீதி ஊடாக பொரளை நோக்கி நகர்வதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.