மனித பாவனைக்கு தகுதியற்ற மதுபானங்களை இனங்கண்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் - ரஞ்சித் சியம்பலாபிட்டிய

Kanimoli
1 year ago
 மனித பாவனைக்கு தகுதியற்ற மதுபானங்களை இனங்கண்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் - ரஞ்சித் சியம்பலாபிட்டிய

 மனித பாவனைக்கு தகுதியற்ற மதுபானங்களை இனங்கண்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு அதிக வருமானம் ஈட்டித்தரும் பட்டியலில் கலால் திணைக்களம் 03வது இடத்தைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அகில இலங்கை கலால் சார்ஜன்ட் மற்றும் ஒழுங்குபடுத்துபவர்கள் சங்கத்தின் 70வது வருடாந்த மாநாட்டில் இன்று (18) கலந்து கொண்ட போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்வருட வரவு செலவுத் திட்டத்துக்கான அரச செலவீனம் 7,800 பில்லியன் ரூபா எனவும், மாதாந்தம் அரசாங்க சம்பளக் கட்டணமாக 92 பில்லியன் ரூபா காணப்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஓய்வூதியத்திற்காக 26 பில்லியன் ரூபா
அத்துடன் ஓய்வூதியத்திற்காக 26 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, மனித பாவனைக்கு தகுதியற்ற மதுபானங்களை இனங்கண்டு, அதற்கு எதிரான சட்டத்தை அமுல்படுத்துவதற்காக கலால் திணைக்களத்தின் கீழ் தனியான ஆய்வுகூடத்தை நிறுவுவதற்கு இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிந்துள்ளதாகவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இதன் மூலம் தாமதமின்றி அதனுடன் தொடர்புடைய மதுபானங்களை இனங்கண்டு அவற்றை சமூகமயப்படுத்துவதை தடுக்க முடியும் எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!