சீனாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற 'தங்க சேவல் விருதுகள்' விழா

Prasu
1 year ago
சீனாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற 'தங்க சேவல் விருதுகள்' விழா

சீன திரைப்படத்துறையின் முக்கிய நிகழ்வான 35-வது ஆண்டு 'தங்க சேவல் விருதுகள்' (The Golden Rooster Awards) விழா தெற்கு சீனாவில் உள்ள சியாமென் நகரில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. 'தங்க சேவல் விருது' என்பது சீனாவில் உள்ள தொழில்முறை திரைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் கவுரவம் மிக்க விருதாக கருதப்படுகிறது.

இந்த ஆண்டு தங்க சேவல் விருதுக்கான நடுவர் குழு பல்வேறு வகைகளைச் சேர்ந்த 168 படங்களில் இருந்து சிறந்த படங்களை சேர்ந்தெடுத்து விருதுகளை அறிவித்துள்ளது. அதன்படி 'தி பேட்டில் அட் லேக் சாங்க்ஜின்' என்ற திரைப்படம் இந்த ஆண்டின் சிறந்த திரைப்படமாக அறிவிக்கப்பட்டது.

இந்த திரைப்படம் 1950-களில் நடைபெற்ற கொரிய போரைப் பற்றிய வரலாற்றுக் கதையை மையமாக கொண்டிருந்தது. சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனர் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் இந்த படம் விருதுகளை வென்றது.

அதே போல், 'லைட்டிங் அப் தி ஸ்டார்ஸ்' படத்தில் நடித்த சூ இலாங், சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். சிறந்த நடிகைக்கான விருதை 'சாங் ஆப் ஸ்பிரிங்' படத்தில் நடித்த நடிகை ஸி மெய்ஜியான் பெற்றார். இந்த ஆண்டு ஏராளமான இளம் கலைஞர்கள் விருதுகளை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!