லண்டனில் மீண்டும் ஒரு பயங்கரம் - பாதுகாப்பற்ற நிலையில் பெண்கள்

Nila
1 year ago
லண்டனில் மீண்டும் ஒரு பயங்கரம் - பாதுகாப்பற்ற நிலையில் பெண்கள்

லண்டனில் வீட்டிற்கு நடந்து சென்ற ஒரு பெண்ணைக் கொலை செய்த குற்றத்தை குற்றவாளி ஒப்புக் கொண்டுள்ளார்.

பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் குற்றவாளி நேற்றைய தினம் இந்த குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

இது நகரத்தின் வீதிகளில் செல்லும் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரிக்கும் தாக்குதல்களின் தொடரில் ஒன்றாக கருதப்படுகின்றது.

Jordan McSweeney என்ற 29 வயதான நபர் 35 வயதான Zara Aleena என்ற பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். ஜுன் மாதம் இடம்பெற்ற இந்த கொலை தொடர்பில் நேற்றைய தினமே அவர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.

Jordan McSweeney என்பவர் கொள்ளை மற்றும் தாக்குதல் உள்ளிட்ட 69 குற்றங்களுக்கு 28 தண்டனைகளுடன், நீண்ட குற்றப் பதிவுடன் உள்ளவர் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

வழக்கறிஞராக பயிற்சி பெற்று வந்த சட்டப் பட்டதாரியானZara Aleenaவை தாக்கிய சில நாட்களுக்கு முன்னர் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த கொலை குற்றவாளிக்கு லண்டனின் மத்திய குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதி டிசம்பர் 14 ஆம் திகதியை தண்டனை திகதியாக நிர்ணயித்துள்ளார்.

கடந்த சில காலங்களாக லண்டன் வீதிகளில் தனிமையில் செல்லும் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்குள்ளாகி கொலை செய்யப்படும் சம்பவங்கள் பாரிய அளவு அதிகரித்துள்ளது.

இதனால் லண்டன் வீதிகள் பெண்களுக்கு பாதுகாப்பற்ற இடமாற மாற்றமடைந்து வருவதாக பல தரப்பினரும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!