பெருநாட்டில் ஓடு பாதையில் தீயணைப்பு வாகனம் மீது மோதி விமானம் தீப்பிடித்ததில் 2 பேர் மரணம்

#America #Crash #Death
Prasu
2 years ago
பெருநாட்டில் ஓடு பாதையில் தீயணைப்பு வாகனம் மீது மோதி விமானம் தீப்பிடித்ததில் 2 பேர் மரணம்

தென்அமெரிக்க நாடான பெரு தலைநகர் லிமாவில் உள்ள விமான நிலையத்தில் ஏர்பஸ் ஏ320 விமானம் ஒன்று புறப்பட்டது. உள்ளூர் விமானமான அதில் 102 பயணிகள் இருந்தனர். 

விமானம் ஓடு பாதையில் இருந்து மேலே எழும்ப வேகமாக சென்றது. அப்போது திடீரென்று அங்கிருந்த தீயணைப்பு வாகனம் மீது விமானம் எதிர்பாராதவிதமாக மோதியது. 

வாகனம் மீது மோதிய வேகத்தில் விமானத்தின் பின்புறம் தீப்பிடித்தது. இதனால் விமானத்தை விமானிகள் நிறுத்த முயற்சித்தனர். 

ஓடு பாதையில் விமானம் தீப்பொறிகள் பறந்தபடியும், கரும்புகை வெளியேறியவாறும் பல அடி தூரம் சென்று நின்றது. 

விமானத்தில் இருந்து பயணிகள் பீதியில் அலறினார்கள். உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து விமானத்தில் எரிந்த தீயை அணைத்தனர். 

விமானத்துக்குள் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்களை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் தீயணைப்பு படையைச் சேர்ந்த 2 பேர் பலியானார்கள். 

இந்த விபத்து குறித்து அதிகாரிகள் கூறும்போது, "உள்நாட்டு விமானம் ஓடு பாதையில் புறப்பட்ட போது தீயணைப்பு எந்திரத்தில் எதிர்பாராதவிதமாக மோதியது. 

இந்த விபத்தில் தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். பயணிகள், விமான ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றனர்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!