அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுக்க அணு ஆயுத தாக்குதல் நடத்துவதாக வடகொரிய ஜனாதிபதி மிரட்டல்

Prasu
2 years ago
அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுக்க அணு ஆயுத தாக்குதல் நடத்துவதாக வடகொரிய ஜனாதிபதி மிரட்டல்

வடகொரியா சமீப காலமாக ஏவுகனை சோதனையை தொடர்ந்து நடத்தி வருகிறது. தென் கொரியா, அமெரிக்கா கூட்டு போர் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏவுகனை சோதனை நடக்கிறது. 

சமீபத்தில் வடகொரியா வீசிய ஏவுகனை ஒன்று தென் கொரியா எல்லை அருகே விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது. 

அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் கடும் எதிர்ப்பை மீறி வடகொரியா அடிக்கடி ஏவுகனை சோதனை நடத்தி வருகிறது. 

வடகொரியா அணு ஆயுத சோதனையை நடத்த வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்கா கூறி வருகிறது. 

இந்த நிலையில் வடகொரியா அதிபர் ஜிம்ஜாங் உன், அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 

நேற்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனை சோதனையை கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டார். 

பின்னர் அவர் கூறும் போது, வடகொரியா, அணு ஆயுதங்களை பயன்படுத்தி தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுக்கும், இந்த அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கு முழுமையான மோதலை எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம். 

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் அச்சுறுத்தல்கள் பகைமை கொள்கையை தொடர்கிறது. இது அணு ஆயுத தடையை எதிர்த்து பெரிய அளவில் சோதனை செய்ய வடகொரியாவை தூண்டி வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!