போலாந்து நாட்டில் விழுந்த ஏவுகணை குறித்த தெரிவிக்க நட்பு நாடுகளுக்கு கோரிக்கை விடுத்த உக்ரைன் ஜனாதிபதி
நோட்டோ ராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. அதனால் கடந்த பிப்ரவரி மாதம் அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.
இந்த போரானது 9 மாதங்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் உக்ரைன் நாட்டின் மீது தொடர்ச்சியாக ரஷ்யா ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நடத்த தாக்குதலில் போலந்து நாட்டில் ஏவுகணை விழுந்து வெடித்துள்ளது. இந்த ஏவுகணையை வீசியது ரஷ்யாவா? உக்ரைனா? என்பது இன்னும் தெரியவில்லை.
இது குறித்து ரஷ்யா தூதரகத்திற்கு போலந்து அரசு சம்மன் அனுப்பியுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று ரஷ்யா கூறியுள்ளது.
அதேபோல போலாந்தில் விழுந்த ஏவுகணை ரஷ்யாவை அழிக்க உக்ரைன் படைகளால் வீசப்பட்டுள்ளதாக இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது, “அனைத்து விவரங்கள் மற்றும் உண்மைகளை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
போலாந்து நாட்டில் விழுந்த ஏவுகணை குறித்த அனைத்து தகவல்களையும் தர வேண்டும்” என்று நட்பு நாடுகளுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.