தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு ஆச்சரியமூட்டி இலங்கைக்கு உதவிகளை பெற்ற ரணில்!

Mayoorikka
3 years ago
 தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு ஆச்சரியமூட்டி இலங்கைக்கு உதவிகளை பெற்ற ரணில்!

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவிற்கும்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இடையில்  சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கு உதவ தென்னாப்பிரிக்க விருப்பம் வெளியிட்டுள்ளதாக அரசாங்கத்ததரப்புக்கள் தெரிவிக்கின்றன.

தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி சிரில் ரமபோசா, உலகத் தலைவர்களின் உச்சிமாநாட்டுக்காக பாலி (இந்தோனேசியா) செல்லும் வழியில் இரண்டு முறை கொழும்பு  ஊடாக பயணம் செய்தார்,

 இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி அவரை சந்திக்கும் வாய்ப்பை பெற்றுக்கொண்டார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஒட்டியுள்ள இலங்கை விமானப்படை தளத்தில் ஜனாதிபதி விக்கிரமசிங்க அவருக்கு இரவு விருந்தளித்தார்.

இதன்போது அன்றைய தினம் ரமபோசாவின் பிறந்தநாள் என்பதால், ரணில் விக்கிரமசிங்க ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் கேக், ரமபோசாசை ஆச்சரியமடையச் செய்தது.

இதில் முதலாவது துண்டை, அவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஊட்டிய பின்னர், ரணில் விக்கிரமசிங்க, தமது கோரிக்கையை முன்வைக்க ஆரம்பித்தார்.

இதன்போது, பொருளாதார மற்றும் கலாசார விவகாரங்களில் இலங்கைக்கு உதவ தென்னாபிரிக்க ஜனாதிபதி முன்வந்தார்.

அத்துடன் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு இலங்கைக்கு உதவி வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க, தமக்கு கிடைத்த இந்த ஜனாதிபதி பதவி வாய்ப்பை, தாம் பிரதமராக இருந்த காலத்தில் செய்த பணிகளை காட்டிலும், அதிகமாக செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது.

இதன் அடிப்படையில், அவர் அரசாங்கத்துக்கு தலைமை தாங்குவது மாத்திரமல்லாமல், வெளிநாட்டு தொடர்புகள் உட்பட்ட பல்வேறு விடயங்களிலும் மற்றவர்களைவ விட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்கத்ததரப்புக்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4