மியன்மாரில் நடைபெற்ற அழகிப் போட்டியில்கலந்துக்கொண்ட ரசங்கி சாமிகா விதானவசம் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Kanimoli
2 years ago
மியன்மாரில் நடைபெற்ற அழகிப் போட்டியில்கலந்துக்கொண்ட ரசங்கி சாமிகா விதானவசம்  பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மியன்மாரில், நவம்பர் 8 முதல் 14 வரை நடைபெற்ற அழகிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துக்கொண்ட ரசங்கி சாமிகா விதானவசம்,  பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இலங்கையில் சர்வதேச நிகழ்வை ஏற்பாடு செய்யும் பணியை மேற்கொண்ட எம்ஆர் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்திய மலித் ரணசிங்க, தன்னிடம் பாலியல் லஞ்சம் கோரியதாக விதானவாசம் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருளை பயன்படுத்துமாறு மலித் ரணசிங்க அவரை வற்புறுத்த முயற்சிக்கும் ஒலிப்பதிவு ஒன்றும் நேற்று ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது.
உடன்படிக்கையின்படி, போட்டிக்கு விதானவாசத்தின் அழகைப் பராமரிக்கும் பொறுப்பு மலித் ரணசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்தது.
அத்துடன் அழகுப் போட்டியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான செலவுகளை எம்ஆர் என்டர்டெயின்மென்ட் நிறுவனமே ஏற்றிருந்தது.
எனினும் ரசங்கி சாமிகா விதானவசம், மியான்மருக்கு சென்ற பின்னர்,அவர் போட்டியில் பங்கேற்பதற்கான கட்டணம் செலுத்தப்பட்டிருக்கவில்லை.
இந்தக் கட்டணம் செலுத்தாமல் போட்டியில் பங்கேற்க முடியாது என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து பின்னர் அமெரிக்காவில் உள்ள தனது கணவரிடம் பணம் செலுத்துவதற்காக பணத்தை அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும் அவர் பணம் செலுத்தும்போது தாமதம் காரணமாக, அவரால் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை பெற்றுக்கொள்ளமுடியவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில், எம்ஆர் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்திய மலித் ரணசிங்க, இன்னும் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!