வீதி அபிவிருத்தி அதிகாரசபை மின்சார கட்டணம் செலுத்தாமையால்- கொழும்பிலுள்ள வீதிகள் இருளில் மூழ்கும் அபாயம்!

Nila
3 years ago
வீதி அபிவிருத்தி அதிகாரசபை  மின்சார கட்டணம் செலுத்தாமையால்- கொழும்பிலுள்ள வீதிகள் இருளில் மூழ்கும்  அபாயம்!

கொழும்பிலுள்ள வீதிகள் இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளதென செய்தி வெளியாகியுள்ளது.

அத்துடன், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன எச்சரித்துள்ளார். 

வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் நிலுவையில் உள்ள 15 மில்லியன் ரூபா மின்சார கட்டணத்தை செலுத்தாமையால், கொழும்பில் வீதி விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞை முறைமைகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு நகரில் வீதி விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞைகள் தொடர்பான கட்டணங்கள் சுமார் 5 மாதங்களாக செலுத்தப்படவில்லை.

இத்தொகையை செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு பல தடவைகள் அறிவித்தும் மின்சார சபைக்கு இது தொடர்பில் எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை.

இந்நிலைமையினால் வீதி விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞைகள் துண்டிக்கப்பட்டால் எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளதுடன், கொழும்பிலுள்ள வீதிகள் பல இருளில் மூழ்கும் நிலை ஏற்படும்.

மேலும், பல வீதிகளில் உள்ள மின் விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞை அமைப்புகளுக்கான மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4