பிள்ளையான் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பதிலடி

Kanimoli
3 years ago
பிள்ளையான் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பதிலடி

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் பிள்ளையான் என அழைக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பதிலடி வழங்கியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த பதிலை வழங்கியுள்ளார்.

இதன்போது சாணக்கியன் கூறுகையில், நாடாளுமன்றத்தில் நான் இல்லாதபோது என்னைப்பற்றி அவதூறு பேசி பல்வேறு குற்றச்சாட்டுகளையும் சக நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துறை சந்திரகாந்தன் முன்வைத்திருந்தார்.

அந்தக் குற்றச்சாட்டுகளை நான் முற்றாக மறுக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் மட்டக்களப்பில் இடம்பெறும் காணி சுவீகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இதேவேளை தனக்கு எதிராக முன்​வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தாம் ஆவணங்களுடன் பதிலளிப்பதாக கூறியுள்ளார்.

மேலும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய ஆவணங்களையும் சமர்ப்பிப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4