கனடா அனுப்புவதாக கூறி சுமார் 100 லட்சம் ரூபா மோசடி செய்த பெண்ணொருவர் மீது முறைப்பாடு
Kanimoli
2 years ago
கனடா அனுப்புவதாக கூறி சுமார் 100 லட்சம் ரூபா மோசடி செய்த பெண்ணொருவர் மீது மானிப்பாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இளவாலை காவல்துறை பிரிவிற்குற்பட்ட பண்டத்தரிப்பு - வடலியடைப்பு பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் மீதே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குற்பட்ட சண்டிலிப்பாய் மற்றும் சங்கானைப் பகுதியை சேர்ந்த இருவரிடம் கனடாவிற்கு அனுப்புவதாக கூறி பெறப்பட்ட 55 லட்சம் மற்றும் 44 லட்சத்து 35 ஆயிரம் ரூபா பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த பணத்தொகையை கடந்த ஏப்ரல் மாதம் குறித்த பெண்ணிடம் வழங்கியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மானிப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.