வெளிவிவகார அமைச்சின் தூதரக கடமைகள் தொடர்பான கட்டணங்களை திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானம்
Kanimoli
2 years ago
இலங்கையில் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வெளிவிவகார அமைச்சின் தூதரக கடமைகள் தொடர்பான கட்டணங்களை திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கட்டணங்கள் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவுறுத்தலுக்கமைய, வெளியுறவு அமைச்சகத்தின் தூதரகப்பிரிவு மற்றும் அதன் பிராந்திய அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தூதரகப் பணிகள் தொடர்பான கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன.