சூடுபிடித்த பாராளுமன்ற விவாதம்: தாக்குதல் முயற்சி! சபாநாயகரால் வெளியேற்றப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்

Mayoorikka
2 years ago
 சூடுபிடித்த  பாராளுமன்ற விவாதம்: தாக்குதல் முயற்சி! சபாநாயகரால் வெளியேற்றப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சாவை தாக்க முயற்சித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறியை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்ற சபையிலிருந்து நீக்கியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களை தாக்குவதற்கு முயற்சித்தாக ஏனைய உறுப்பினர்கள் தெரிவித்ததை தொடர்ந்தே குறித்த எம்.பியை பாராளுமன்றத்தில் இருந்து சபாநாயகர் வெளியேற்றியுள்ளார்.

இதனால், நாடாளுமன்றம் மிகவும் சூடுபிடித்துள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி இன்று சபை அமர்வில் பங்கேற்கமாட்டார் என சபாநாயகர் மேலும் அறிவித்தார்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்டம் 79இற்கு அமைவாகவே இந்த கட்டளையை சபாநாயகர் பிறப்பித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சாவை தாக்குவதற்கே அவர் முயற்சித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!