ஆசிரியர்களின் ஆடை விவகாரம்: நீதிமன்றத்தை நாடி உரிமையை வென்றெடுப்போம்! இலங்கை ஆசிரியர் சங்கம்

Mayoorikka
2 years ago
ஆசிரியர்களின் ஆடை விவகாரம்:  நீதிமன்றத்தை நாடி உரிமையை வென்றெடுப்போம்! இலங்கை ஆசிரியர் சங்கம்

பாடசாலைகளில் கடமையாற்றும் சில பெண் ஆசிரியைகள் தங்களிடம் இருக்கும் வசதியுள்ள ஆடைகளை அணிந்துகொள்வதற்கு எதிராக கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

பொதுநிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் ஆசிரியர்கள் வசதியான ஆடைகளை அணிந்து பணிக்கு வருவதாக சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அந்த சுற்றறிக்கைகளின்படி, புடவை போன்ற வசதியான ஆடைகளை அணிவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், பெண் ஆசிரியர்கள் அநாகரீகமான உடை அணிந்து வரக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் நிலைமையை கருத்தில் கொள்ளாமல் சீருடை தொடர்பில் தீர்மானம் எடுத்தால் நீதிமன்றத்தை நாடி உரிமையை வென்றெடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

பாடசாலை ஆசிரிய ஆசிரியைகளுக்கு சீருடைகளை பரிந்துரைப்பதில்லை, சீருடைகளுக்கு கூடுதல் கட்டணம் செலுத்துவதில்லை என்றும், அதற்கு நியாயமான தொகையை வழங்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!