எம்பிலிபிட்டிய வீதியில் பனாமுர பகுதியில் காவல்துறை அதிகாரியொருவர் விபத்தில் பலி

Kanimoli
2 years ago
எம்பிலிபிட்டிய வீதியில் பனாமுர பகுதியில் காவல்துறை அதிகாரியொருவர் விபத்தில் பலி

பனாமுர-எம்பிலிபிட்டிய வீதியில் பனாமுர பகுதியில் காவல்துறை அதிகாரியொருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 21ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.

பனாமுர காவல்துறை குழுவொன்று சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதன் பின்னர், காவல்நிலையத்திற்கு திரும்பியுள்ளது.

இதன்போது காவல்துறை அதிகாரிகள் இருவர் உந்துருளியில் வந்தபோது எதிரே நாயொன்று வீதிக்கு குறுக்காக பாய்ந்துள்ளது. இதனால் உந்துருளி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த இருவரும் காயமடைந்த சிகிச்சைகளுக்காக எம்பிலிபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் நேற்று (22) ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

பனாமுற காவல்நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிய, பன்னன்விலயாய-கட்டுவன பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய எஸ்.ஷாந்த என்ற அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த மற்றைய அதிகாரி எம்பிலிபிட்டிய மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!