நாட்டில் போராட்டங்களினால் ஆட்சிமாற்றத்தை கொண்டுவருவதற்கு இடமளிக்க போவதில்லை -ரணில்

Kanimoli
2 years ago
நாட்டில் போராட்டங்களினால் ஆட்சிமாற்றத்தை கொண்டுவருவதற்கு  இடமளிக்க போவதில்லை -ரணில்

நாட்டில் போராட்டங்களினால் ஆட்சிமாற்றத்தை கொண்டுவருவதற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சபை விவாத உரையின் போதே அவர் இதனை குறி்ப்பிட்டுள்ளார்.

அவ்வாறு ஆட்சிமாற்றம் செய்வதற்காக போராட்டத்தில் ஈடுபடுவார்களாயின், முப்படையினரை பயன்படுத்தி அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்

“கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இது வன்முறை செயலாகும். அவ்வாறு தீ வைப்பதற்கு யார் அவர்களுக்கு அதிகாரம் வழங்கினார்கள்?

தீ வைத்தவர்களின் பின்னால் யார் செயற்பட்டார்கள் என்பதை கண்டறிய விசேட செயலணி ஒன்றை ஸ்தாபிக்க எதிர்பார்கிறேன்.

அத்தோடு, தேர்தல் முறைமையிலும் மாற்றம் ஏற்படுத்துவது அவசியம் மற்றும் விருப்பு வாக்களிப்பு முறை இருக்கும் வரையில் ஊழல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்” எனவும் சபையில் சுட்டிகாட்டியிருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!