மண்ணெண்ணெய் விநியோகத்தில் நிலவுகின்ற தாமதத்தை எதிர்வரும் இரண்டு நாட்களில் முழுமையாக நீக்க அரசாங்கம் நடவடிக்கை
Prabha Praneetha
2 years ago
மண்ணெண்ணெய் விநியோகத்தில் நிலவுகின்ற தாமதத்தை எதிர்வரும் இரண்டு நாட்களில் முழுமையாக நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மீனவர்களுக்கான எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 74 மண்ணெண்ணெய் பவுசர்கள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (சமூக விவகாரப் பிரிவு) கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.
இதற்கமைய, 49 தனியார் துறை எரிபொருள் நிரப்பு நிலையங்கள், 18 கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் ஏனைய 07 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் தொடர்ந்து விநியோகிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.