பருவநிலை மாற்றத்திற்கு தீர்வு காண அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்-ஐ.நா. பொதுச் செயலாளர்

Prasu
1 year ago
பருவநிலை மாற்றத்திற்கு தீர்வு காண அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்-ஐ.நா. பொதுச் செயலாளர்

கடந்த 1991 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் ஐரோப்பாவில் அதிக அளவில் வெப்பம் பதிவானது. ஆனால் தற்போது அதைவிட 2  டிகிரி செல்சியஸ் அதிகம் வெப்பம் பதிவாகியுள்ளது. 

இதன் காரணமாக ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள் கடந்த  மாதத்தில் வறட்சி அடைந்து காணப்பட்டது. அதேசமயம் மேற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகள் ஈரப்பதம் மிக்கதாகவும் இருந்துள்ளது. 

இதுகுறித்து ஐ.நா. உலக வானிலை  அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் புவி வெப்பமடைதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இதனால் கடந்த 2015 முதல் 2020 -ஆம் ஆண்டு வரை அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதனால் பனிப்பாறைகள் உருகி கடல் நீர்மட்டம் அதிகரிக்கலாம் எனவும், கடுமையான மழை மற்றும் வெப்ப அலைகள் போன்ற தீவிர வானிலை ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதனையடுத்து எகிப்தில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாற்றம் மாநாட்டில் இந்த பருவநிலை மாற்றத்திற்கு தீர்வு காண அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர்  வலியுறுத்தினார். 

இந்நிலையில் இதுகுறித்து வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் இடையே ஒரு வரலாற்று உடன்படிக்கை ஏற்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளதது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!