அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் போர் ஆரம்பமா?

#America #government #Russia #War #Oil #Venezuela
Prasu
1 day ago
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் போர் ஆரம்பமா?

உலக அரசியல் களத்தில் வல்லரசு நாடுகளுக்கு இடையிலான மோதல் இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 

குறிப்பாக, எண்ணெய் வளம் மிக்க வெனிசுலாவை மையமாக வைத்து அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஒரு நேரடிப் போர் மூளும் அபாயம் உருவாகியுள்ளது.

வெனிசுலாவின் இயற்கை வளமான கச்சா எண்ணெயைக் குறிவைத்து அமெரிக்கா காய்நகர்த்தி வருகிறது.

"வெனிசுலாவின் 300 பில்லியன் எண்ணெய் பாரல்களை, அந்த நாட்டுக்கு ஒரு டாலர் கூட கொடுக்காமல் அமெரிக்கா கைப்பற்றும்" என்று டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக அறிவித்தது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஒரு நாட்டின் இறையாண்மையை மதிக்காமல், அதன் இயற்கை வளங்களைச் சூறையாடும் அமெரிக்காவின் இந்த 'கொள்ளை' மனப்பான்மை பெரும் கண்டனத்திற்குரியது.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் நிலைகுலைந்து போயிருக்கும் வெனிசுலாவிற்கு ரஷ்யா கைகொடுக்க முன்வந்துள்ளது. வெனிசுலாவிடமிருந்து முறையான விலைக்கு எண்ணெயை வாங்க ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது. 

இதன் மூலம் வெனிசுலாவின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க அதிபர் விளாடிமிர் புதின் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

தன்னையும் மீறி வெனிசுலாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளின் சரக்குக் கப்பல்களை வழிமறிப்போம் என்றும், அவற்றை முடக்குவோம் என்றும் அமெரிக்கா மிரட்டல் விடுத்தது. 

ஆனால், இந்த மிரட்டலுக்கு ரஷ்யா சற்றும் அஞ்சவில்லை. அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள, அணு ஆற்றலால் இயங்கும் அதிநவீன இராணுவ நீர்மூழ்கிக் கப்பலையும், ரஷ்யாவின் வலிமைமிக்க போர்க்கப்பல் படையையும் வெனிசுலா கடற்பகுதிக்கு புதின் விரைந்து அனுப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தில் ஒரு அங்குலம் கூட பின்வாங்கத் தயாராக இல்லாத புதின், தனது கடற்படைக்கு மிகத் தெளிவான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 

"சர்வதேச கடல் எல்லையில் அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், சற்றும் யோசிக்காமல் உடனடியாகத் திருப்பித் தாக்குங்கள்" என்பதே அந்த அதிரடி உத்தரவு.

அமெரிக்காவின் வீட்டு வாசலிலேயே (வெனிசுலா அருகில்) ரஷ்யாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் முகாமிட்டிருப்பது, வாஷிங்டனுக்கு கடும் அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. 

வல்லரசுகளின் இந்த மோதல் போக்கு, எப்போது வேண்டுமானாலும் ஒரு பெரும் போராக வெடிக்கலாம் என்ற அச்சத்தில் உலகம் உறைந்து போயுள்ளது.

ட்ரம்பின் அட்டகாசத்திற்கு முடிவு கட்ட ஒருவன் வராமலா போய்விடுவான் என உலக மக்கள் கடவுளை வேண்டியது கூடிய சீக்கிரம் நடந்துவிடுமோ என எண்ணத் தோன்றுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!