சிரியா நாட்டில் நடந்த வெடிகுண்டு விபத்தில் ஈரான் நாட்டு ராணுவ அதிகாரி உயிரிழப்பு

Prasu
1 year ago
சிரியா நாட்டில் நடந்த வெடிகுண்டு விபத்தில் ஈரான் நாட்டு ராணுவ அதிகாரி உயிரிழப்பு

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் அரசாங்கத்தை எதிர்த்து, கடந்த 2011-ஆம் வருடத்திலிருந்து  மேற்கொண்டு வருகிறார்கள். 

இதில், குழந்தைகள், பெண்கள் உட்பட இலட்சக்கணக்கானோர் பாதிப்படைந்து கொண்டிருக்கிறார்கள். எனினும் போர் முடிவடையவில்லை. இதில் ஈரான் அரசு சிரியா நாட்டின் அதிபரான பஷர் அல்-ஆசாத்திற்கு ஆதரவளிக்கிறது.

மேலும் தங்கள் படைகளையும் அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் நடந்த வெடிகுண்டு விபத்தில் ஈரான் நாட்டை சேர்ந்த கர்னல் தாவூத் ஜாபரி என்ற ராணுவ அதிகாரி பலியானார். 

ஈரான், இஸ்ரேல் தான் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேல் அரசு, சிரியா நாட்டில் இருக்கும் ஈரானின் ஆதரவு பெற்ற இடங்களை நோக்கி தாக்குதல் மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!