உடலில் டேட்டு வரைந்து உலக சாதனை படைத்த தம்பதி
உடலில் டேட்டு வரைந்து கொள்வது இன்றைய இளைய தலைமுறையினருக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயமாக இருந்து வருகிறது.
நமக்கு பிடித்தவர்களின் பெயரை டாட்டூ போடுவது ஹார்ட் மற்றும் ஈகிள், ஸ்கார்பியன் வடிவங்களில் டேட்டூ போடுவது என்று பலரும் வரைந்து கொள்வார்கள்.
இதில், ஒரு படி மேலே போய் தங்களுக்கு பிடித்தவர்களின் முகத்தை உடலில் வரைந்து கொள்வதை கூட இப்போது செய்து வருகின்றனர். அந்த வகையில் டாட்டு போட்டே ஒரு தம்பதி உலக சாதனை செய்துள்ளது அர்ஜென்டினாவில் நிகழ்ந்துள்ளது.
உடலில் டேட்டு வரைதல் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் செய்த ஒரு தம்பதி உலக அளவில் சாதனை படைத்துள்ளனர்.
கேப்ரில்லா மற்றும் விக்டர் ஹ்யூகோ என்ற பெயர் கொண்ட இந்த தம்பதிகள் உடல் முழுவதும் 98 மாற்றங்களை செய்து உலக சாதனை படைத்து இருக்கின்றனர்.
விக்டர் உருகுவே நாட்டைச் சேர்ந்தவர் கேப்ரில்லா அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் கண்களின் வெள்ளை நிற பகுதிகளை கூட விட்டு வைக்காமல் டாட்டூ குத்தி இருக்கின்றனர்.
இதனால் அவர்களது கண்களில் உள்ள வெள்ளை நிற பகுதி கருமை நிறமாக இருக்கிறது. இப்படி கண்களை கூட விட்டு வைக்காத இந்த தம்பதிகளின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.