யாழில் திடீர் சுற்றிவளைப்பு - மருந்து பொருட்களுடன் நால்வர் கைது!
#SriLanka
#Jaffna
#Arrest
#drugs
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 day ago
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வந்த மருந்துப் பொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப்புரங்களில், காவல்துறை சிறப்புப் படையினருடன் இணைந்து இலங்கை கடற்படை முன்னெடுத்த சோதனைகளில் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வந்த 860 மருந்துப் பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”