மட்டக்களப்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
பெற்றோர்கள், உறவினர்கள் கௌரவிப்பு நிகழ்வு மட்டக்களப்பு வெல்லாவெளியில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் வியாழக்கிழமை(24) இடம்பெற்றது.
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுவின் ஆரம்பத்தில் மாவீரர்களை நினைவு கூரும் முகமாக மாவீரர்களின் பெற்றோர், ஜனநாயகப் போரளிகள் கட்சியின் பிரதிநிதிகளால் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நினைவுரை, சிறப்புரைகளின் பின், பெற்றொர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கு உதவிகள் மற்றும் தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
மாவீரர் நினைவு வாரத்தை அனுஸ்டிக்கும் முகமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் பல செயற்திட்டங்கள், துயிலுமில்ல துப்பரவுப் பணிகள், என சில ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.