யானைகளின் கூட்டத்தை அவற்றின் உரிமையாளர்களுக்கு விடுவிப்பதைத் தடுக்கும் உத்தரவு
வனஜீவராசிகள் திணைக்களத்தினால் வசமுள்ள அனுமதியற்ற ஐந்து யானைகளை அவற்றின் அசல் உரிமையாளர்களிடம் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் செயற்பாட்டை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு 14 நாட்களுக்கு அமலில் இருக்கும்.
யானைகளை அசல் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்கு எதிராக நான்கு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
சுற்றாடல் நீதி மையம் உள்ளிட்ட குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை பரிசீலித்த சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சில யானைகளை அசல் உரிமையாளர்களுக்கு வழங்க மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக மனுதாரர் தரப்பு தெரிவித்துள்ளது.
யானைகளை மீள்பதிவு செய்வது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இவ்வாறானதொரு உத்தரவை பிறப்பித்துள்ளமை சிக்கலானது என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.அந்த உண்மைகளை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.