இலங்கையில் 0.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு ஒதுக்கத்தின் பெறுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
#SriLanka
#Central Bank
#Dollar
Mugunthan Mugunthan
2 years ago
மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2022 ஒக்டோபர் இறுதியில் இலங்கையின் உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு நாணய ஒதுக்கம் 1.7 பில்லியன் டொலர்களாக இருந்தது.
இதில், சீன மக்கள் வங்கி வழங்கிய 1.4 பில்லியன் ரூபாய்களும் அடங்கும்,
இந்த நிலையில், சுற்றுலாத்துறையின் வளர்ச்சி வெளிநாட்டு ஒதுக்கத்தில் நன்மையை ஏற்படுத்தும். இதேவேளை, பணம் அச்சிடும் பணி குறைந்துள்ளதுடன், கடந்த 2021ஆம் ஆண்டு 341 பில்லியன் ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது.
எனினும், கடந்த ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை 47 பில்லியன் ரூபாய் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளது.