மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க அரசு தயாராகிறது

Prathees
2 years ago
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க அரசு தயாராகிறது

மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க வேண்டும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டணத்தில் திருத்தம் செய்யாமல் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செலவின தலைப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அடுத்த வருடத்திற்குள் நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரம் மற்றும் எரிசக்தி நெருக்கடிக்கு சுமார் 90 வீதமான தீர்வு காண முடியும் என இன்று பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் வரவு செலவுத் திட்டம் தொடர்பான வரவு செலவுத் திட்ட குழு வாய்ப்பு விவாதத்தின் போதே இது இடம்பெற்றுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!