ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் எரிபொருளை வாங்க இலங்கை பேச்சுவார்த்தை
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்வனவு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளை இலங்கை ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இது வெளிநாட்டு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் போது,
சர்வதேச நெறிமுறைகள் மற்றும் சட்டங்களை மீறாமல் மானிய விலையில் ரஷ்ய கச்சா எண்ணெயை கொள்வனவு செய்வதற்கு இலங்கை தயாராக இருப்பதாக அமைச்சர் அங்கு தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் இருந்து ரஷ்ய கச்சா எண்ணெயை எந்த நாடும் அகற்ற விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.
எனவே, ரஷ்யாவிடமிருந்து நேரடியாகவோ அல்லது இந்தியா ஊடாகவோ ரஷ்ய கச்சா எண்ணெயை இலங்கைக்கு பெற்றுக்கொள்வது தொடர்பில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அங்கு தெரிவித்துள்ளார்.
உக்ரேனில் இடம்பெற்ற யுத்தம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், எதிர்காலத்தில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை பெற்றுக் கொள்ள முடிந்தால், இலங்கை அதற்காக பாடுபடும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையால் தற்போதைய எண்ணெய் விலையை தாங்க முடியாது, எனவே சர்வதேச சட்டங்கள் மற்றும் நெறிமுறைகளை மீறாமல் இருந்தால், ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெயை பெற முடியும் என்று அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.