சிறுநீரகக் கடத்தல் தொடர்பான விசாரணைகள் குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது

Prathees
2 years ago
சிறுநீரகக் கடத்தல் தொடர்பான விசாரணைகள் குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது

பொரளையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இடம்பெற்ற சிறுநீரகக் கடத்தல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த குற்றச்சாட்டுக்கள் வெளியானதைத் தொடர்ந்து அந்த வைத்தியசாலையின் உறுப்பு மாற்று சத்திரசிகிச்சைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், விசாரணைகள் இன்று (25) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் ஆலோசனைக்கமைய இது இடம்பெற்றுள்ளது.

அதன்படி சிறுநீரக தானம் செய்பவர்கள் குழுவொன்று இன்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.

இதேவேளை, சிறுநீரகக் கடத்தலுக்கு உதவிய பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பிலும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரி இதற்கு முன்னரும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோசடி விசாரணைப் பிரிவின் கடமைகளில் இருந்தும் அவரை நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!