அவுஸ்திரேலியாவில் பெண் படுகொலை வழக்கில் சந்தேகநபர் இந்தியாவில் கைது
2018ம் ஆண்டு குயின்ஸ்லாந்தில் அவுஸ்திரேலியப் பெண்ணைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இந்திய செவிலியர் டெல்லி காவல்துறையால் இன்று கைது செய்யப்பட்டார்.
38 வயதான ராஜ்விந்தர் சிங், இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கு முன், டோயா கார்டிங்லி (24) என்பவரை கடற்கரையில் வைத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
குயின்ஸ்லாந்தின் வாங்கட்டி கடற்கரையில் கார்டிங்லி என்ற மருந்தகத் தொழிலாளி தனது நாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது கொல்லப்பட்டார்.
கார்டிங்லி கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு சிங், தனது வேலை, மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை விட்டுவிட்டு அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறினார்.
சிங்கின் கைதுக்கு வழிவகுத்த தகவலுக்காக குயின்ஸ்லாந்து காவல்துறை ஒரு மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்களை வழங்கியதாக தெரிவிக்ககப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அரசாங்கம், மார்ச் 2021 இல், சிங்கை நாடு கடத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கைக்கு இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.