சுவிட்சர்லாந்தில் இணைய வழி பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு-ஆய்வில் அதிர்ச்சி

Prasu
1 year ago
சுவிட்சர்லாந்தில் இணைய வழி பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு-ஆய்வில் அதிர்ச்சி

சுவிட்சர்லாந்தில் இணைய வழி பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக சுவிட்சர்லாந்தின் இளம் தலைமுறையின் இந்தப் பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் உள்ளிட்ட சிக்கல்களை ஆண் பிள்ளைகளை விடவும் பெண் பிள்ளைகள் அதிகம் எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. டிக்டோக் போன்ற காணொளி பகிர்வு செயலிகளின் பயன்பாடு அதிகரிப்பினால் இந்த நிலைமை உருவாகியுள்ளது.

சூரிச் பிரயோக விஞ்ஞான பல்கலைக்கழகத்தினால் இது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் குறைந்தபட்சம் ஒரு தடவையேனும் பாலியல் ரீதியாக இணைய வழியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

அடையாளம் தெரியாதவர்களினால் அதிகளவில் பெண் பிள்ளைகள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. ஆபாச புகைப்படங்களை அனுப்பி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இந்த துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இளைஞர் சமூகத்தை பாதுகாப்பதற்கு இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!