பிரித்தானியாவின் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த ரிஷி சுனக்!

Nila
2 years ago
பிரித்தானியாவின் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த ரிஷி சுனக்!

2022ஆம் ஆண்டுக்கான, பிரித்தானியாவின் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இடம் பிடித்துள்ளார்.

பிரித்தானியாவின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ள ரிஷி சுனக்கும், அவரது மனைவியும் இன்ஃபோசிஸ் நிறுவன நிறுவனரான நாராயணமூர்த்தியின் மகளுமான அக்‌ஷதா மூர்த்தியும், 2022ஆம் ஆண்டுக்கான, பிரித்தானியாவின் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் 17ஆவது இடத்தைப் பிடித்துள்ளனர். அவர்களுடைய சொத்து மதிப்பு 790 மில்லியன் பவுண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான, பிரித்தானியாவின் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளனர்.

ஹிந்துஜா குடும்பம். ஹிந்துஜா குழுமம் 17 துறைகளில் வெற்றிகரமாக செயல்படும் உலகளாவிய பல்தொழில் நிறுவனம் ஆகும்.

அதன் நிறுவனர் பரமானந்த் தீப்சந்த் ஹிந்துஜா என்னும் இந்தியர் ஆவார். ஹிந்துஜா குழுமத்தின் சொத்து மதிப்பு 30.5 பில்லியன் பவுண்டுகள் ஆகும்.

இந்த ஆண்டுக்கான பிரித்தானியாவின் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில், பிரித்தானியாவில் வாழும் 16 செல்வந்தர்கள் இடம்பிடித்துள்ளனர்.

பட்டியலில், லக்‌ஷ்மி மிட்டல் (சொத்து மதிப்பு 12.8 பில்லியன் பவுண்டுகள்), Sri Prakash Lohia மற்றும் குடும்பத்தினர் (சொத்து மதிப்பு 8.8 பில்லியன் பவுண்டுகள்), Nirmal Sethia (6.5 பில்லியன் பவுண்டுகள்) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!