இலங்கையிலிருந்து வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் வாரத்திற்கு 10,000 டொலர் வருமானம்
இலங்கையில் இருந்து வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும் புளிப்பு வாழைப்பழத்தின் முதல் தொகுதி இன்று டுபாய்க்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நிதியில் விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் ராஜாங்கனை பிரதேசத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள புளிப்பு வாழை ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.
துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படும் முதல் தொகுதியாக 12,500 கிலோ புளிப்பு வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இனிமேல் வாரந்தோறும் சனிக்கிழமை துபாய் சந்தைக்கு இலங்கை புளிப்பு வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாரத்திற்கு 10,000 டொலர் வருமானத்தை நாட்டுக்கு வழங்கியுள்ளதாக விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் பணிப்பாளர் கலாநிதி ரொஹான் விஜேகோன் தெரிவித்தார்.
இலங்கையின் பெயரை சர்வதேச அளவில் புகழுக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பாக இந்த வேலைத்திட்டம் அமைந்துள்ளது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.