விமானப் பயணிகள் 22 கரட்டுக்கு மேல் தங்க நகை அணிய தடை விதிக்கப்படும்: நிதியமைச்சு
Prathees
2 years ago
நாட்டிற்கு வரும் விமானப் பயணிகள் தங்க நகைகள் அணிவதை தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது
தங்க நகையின் மதிப்பு 22 கரட்டுகளுக்கு மேல் இருக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டிற்குள் தங்கம் கடத்தலை தடுக்கும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவித்தார்.
நாளாந்தம் 50 கிலோகிராம் தங்கத்தை அணிந்து கொண்டு தங்க கடத்தல்காரர்கள் சிலர் பிடிபட்டுள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியஇ சுங்கப் பணிப்பாளர் நாயகத்திடம் முன்னர் கோரிய அறிக்கையின் அடிப்படையில் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளார்.